Tuesday, 20 December 2011

ஜெயா சசி இனி..........

சசிகலாவும் ஜெயலலிதாவும் பிரிந்துள்ளனர். இல்லை இல்லை ஜெயலலிதா சசின் நட்பை துண்டித்துகொண்டார். சோ ஜெயலலிதாவிடம் சசிக்கலாவின் அக்குறும்புகளை பூட்டுக்கொடுத்து விட்டார் அதனால்தான் ஜெயா சசியை துரத்திவிட்டார் , முதலமைச்சர் பதவியை கைபற்ற சசி முயர்ச்சித்ததால்தான் ஜெயா கோபமடைந்து சசியை துரத்தி விட்டார் என்கிறார்கள். ஒரு சிலர் இது கணவன் மனைவி சண்டையை போனறது. விரைவில் இணைந்து விடுவார்கள் என்கிறார்கள்.பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

இதில் என் கருத்து என்னவென்றால் ஜெயாவுக்கு முப்பதாண்டுகாலம் உற்ற துணையாக சசி இருந்து வந்துள்ளார்.எத்தனையோ கஷ்ட்ட நஷ்டங்களில் உற்ற துணையாக இருந்துள்ளார். அப்படி பட்டவரை இப்படி தூக்கி எறிந்திருப்பது  என்பது ஜெயாவின் ஆணவத்தையே காட்டுகிறது. இப்பொழுது இருக்கும் கால சூழ்நிலையில் லஞ்ச லாவண்யம் பெருத்துள்ள காலகட்டங்களில்  ஒரு அரசியல் தரகர் அதாவது பல டீளிங்குகளை முடித்து தருவதென்பது ஒரு தலையாய பணியாகும். எந்த ஒரு தொழிலதிபரை கேட்டாலும் இதை ஒப்ப்க்கொள்வார்கள். ஏனென்றால் அதுதான் நிதர்சனம். அந்த டீளுங்குகளை சசி குரூப் கச்சிதமாக இதுவரை செய்து வந்துள்ளது. இனி அந்த தீலிங்க்குகள் இருக்குமா? அல்லது அந்த டீலிங் செய்ய கூடிய இடத்திற்கு யார் வருவார்கள்?. இது தான் பல பெரு முதலாளிகளின் கேள்வி?

சசி ஒரு எழுபது எம்மெல் ஏக்களை இழுத்துக்கொண்டால் ஜெயா என்ன செய்வார்?. ஜெயாவிடம் இருந்தீர்கள் என்றால் சம்பாதிக்க முடியாது.பெங்கக்ளூரு தீர்ப்புக்கு பிறகு யார் முதலமைச்சர் ஆவார் என்றும் தெரியாது. எல்லோரும் எனக்கு ஆதரவு கொடுங்கள். இந்த ஐந்து வருடத்தில் நன்றாக சம்ப்பத்திது கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்று சசி எம் எல் ஏக்களுக்கு தூண்டில் போட்டால் எம் எல் ஏக்கள் என்ன செய்வார்கள்?..

தமிழக அரசியல் இனிவரும் காலங்களில் நன்றாக விறு விருப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த குழம்பிய குட்டையில் முத்தமிழ் வித்தகர் மீன் ஏதாவது பிடிக்கிறாரா?என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




No comments:

Post a Comment